தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நிகழ்ச்சி பிக்பாஸ். பிரம்மாண்டமாக துவங்கிய பிக்பாஸ் 5 சீசன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி கடந்த ஞாயிற்று கிழமை ஆரம்பமானது. 18 போட்டியாளர்கள் களமிரங்கிட இந்நிகழ்ச்சியின் முதல் நாள் அனைவரும் சாதாரணமாக நடந்து கொண்டனர்.
இன்றைய இரண்டாம் நாளில் அவரவர்கள் பற்றிய குடும்ப நிலை பற்றிய டாஸ்க்கில் இசைவாணி கூறிய பிரமோ வீடியோ வெளியாகியுள்ளது. அப்பா ஆர்பரில் வேலை செய்த போது வேலை பறிபோனது. அதன் பின் வாடகை கூட கொடுக்க முடியல வெளியே அனுப்பினாங்க.
போட்டுக்க ஆடை கூட இல்லை, ஒருவேலை சாப்பாட்டுக்கு கூட வழியில்லை. கஷ்டப்படுவதை நினைத்து எண்ணிகிட்டே இருக்காதீங்க ஒரு நாள் வாழ்க்கை மாறும் என்று உருகி பேசியுள்ளார்.