திருமணமாகி ஒரு மாதம்கூட ஆகவில்லை : விவாகரத்து பற்றி கோபப்பட்டு பேசிய வித்யுலேகா ராமன்!!

493

சினிமாவில் உடல் எடையை அதிகம் வைத்திருக்கும் நடிகைகள் பலர் நிராகரித்து படவாய்ப்புகளை இழந்துவிடுவார்கள். அந்தவரிசையில் மோகன் ராமனின் மகளாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி காமெடி நடிகையாக வளம்வந்தார்.

நடிகை வித்யுலேகா ராமன். இதையடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வந்த வித்யுலேகா உடல் எடை அதிகரித்து காணப்பட்டார்.

இதனால் உடல் எடையை குறைக்க கடும் உடற்பயிற்ச்சி மேற்கொண்டு உடல் எடையை முற்றிலும் குறைத்து ஒல்லியாகினார்.

29 வயதான வித்யுலேகா கொரோனா லாக்டவுனுக்கு முன் சஞ்சய் என்பவருடன் நிச்சயம் நடத்தப்பட்டு சமீபத்தில் தான் திருமணம் செய்துகொண்டார். பிரம்மாண்ட திருமண வரவேற்புக்கு பிறகு வித்யுலேகா கணவருடன் ஹனிமூன் சென்று பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.

இந்நிலையில், திருமணமாகி ஒரு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் ரசிகர்கள் இப்படியொரு ஆடையணிந்தால் உடனே விவாகத்து ஆகிவிடும் என்றும் உங்களுக்கு எப்போது விவாகரத்து என கேள்வி கேட்டுள்ளனர். இதற்கு பதிலடி கொடுத்த வித்யுலேகா, விவாகரத்து எப்போது என கேட்க நான் அணிந்த நீச்சல் ஆடை தான் காரணமா?,

பெண்களுக்கு ஆடையால் விவாகரத்து நடக்கும் என நினைத்து கொண்டிருக்கும் 1921ஐ சேர்ந்த ஆண்டிஸ் மற்றும் அங்குள்ஸ் வெளியே போங்கள் என்றும், உங்களின் நச்சுத்தன்மையான கருத்திற்காகவோ உங்களின் குறுகிய எண்ணம் கொண்டவர்களுக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது , வாழு வாழ விடு என்று கூறியுள்ளார்.

Next articleஒருவேலை சாப்பாட்டுக்கு கூட வழியில்லை : உருக்கமாக பேசி அழுத பிக்பாஸ் இசைவாணி!!