தமிழ் சீரியல்களில் பல சீரியல்கள் மிகபிரபலமானவை அதில் ஒன்று தான் விஜய் டிவி சின்னதம்பி சீரியல் . அந்த சீரியல் மூலம் பிரபலமானவர் தான் பவானி ரெட்டி.
தெலுங்கு திரையுலகில் நடித்து வந்த இவர் பின்னர் தமிழ் சீரியல் பக்கம் திரும்பி சின்னதம்பி சீரியலில் நடித்து வந்தார்.
இவருக்கு 2016 ம் ஆண்டு பிரதீப் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் திருமணமாகி 8 மாதங்களில் பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பல கஷ்டங்களை சந்தித்து வந்த பின் தற்போது விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 இல் களமிறங்கியுள்ள நிலையில் இந்த வாரம் நடைபெறும் எமோசனல் டாஸ்க்கில் கானா இசைவானியுடன் பேசும் போது தன் கணவர் இறந்த அதிர்ச்சியிலிருந்து தான் அழுவதே கிடையாது என்றும் என்னாச்சு என்று யோசித்து வந்தேன் எனவும் கூறியுள்ளார்.