பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

513

தமிழகத்தில், காதல் திருமணம் செய்து கொண்ட பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையை சேர்ந்த தம்பதி கண்ணையன்- மணிமுத்து. இவர்களுக்கு வைஷ்ணவி (19) உள்ளிட்ட 4 மகள்கள் உள்ளனர். தம்பதிகளுடக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மணிமுத்து தனது 4 மகள்களுடன் திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வைஷ்ணவி அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அதே நிறுவனத்தில் தேனி மாவட்டம், போடியை சேர்ந்த அருண்குமார் (23) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார்.

அப்போது வைஷ்ணவி மற்றும் அருண்குமார் இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட, இந்த பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் தொடர்ந்து காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு வைஷ்ணவி குடும்பத்தினர் எதிர்த்துள்ளனர்.

இதனால் பெற்றோர் எதிர்ப்பை மீறி, கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்னர் காதல் தம்பதியினர் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை எழுந்துள்ளது. பிரச்னை வரும் போது அருண்குமார், தனது மனைவி வைஷ்ணவியை அவரது தாய் வீட்டில் விட்டு விட்டு சொந்த ஊரான போடிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் அருண்குமார் தனது சொந்த ஊரான போடிக்கு சென்றுவிட்டார். இதையடுத்து, கடந்த வாரம் அருண்குமார் மீண்டும் போயம்பாளையம் வந்துள்ளார்.

அப்போது மாமியார் மணிமுத்துவிடம் தனது மனைவி வைஷ்ணவியை அழைத்து சென்று தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்குவதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து பாண்டியன்நகர் பகுதியில் உள்ள பண்ணாரியம்மன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர்.

வெகுநேரமாகியும், இவர்கள் வீட்டு நேற்று இரவு திறக்கப்படாத காரணத்தினால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்த போது, வைஷ்ணவி உடைகள் இன்றி, கழுத்தில் காயங்களுடன் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்து பொலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் தனிப்படை அமைத்து தலைமறைவான அருண்குமாரை தேடி வருகின்றனர்.

Previous articleகாட்டுவாசியாக மாறி ஷாக் கொடுத்த அஜித்தின் ரீல் மகள் அனிகா!!
Next articleதாலி கட்டிய 21 வயதான மனைவியை 500 ரூபாய்க்கு விற்ற கணவன் : பின்னர் நடந்த விபரீதம்!!