நடிகர் சிவகார்த்திகேயன்,சூரி மற்றும் சத்யராஜ் நடிப்பில் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் 2013 ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
அத்திரைப்படம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற நிலையில் ரசிகர்கள் படத்தின் 2ம் பாகம் வருமா என கேட்டுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் இயக்குநர் பொன்ராம் தனது டுவிட்டரில்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 வருவது உறுதி, சிவகார்திகேயன் சார் maturity ஆகிவிட்டார், அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் எடுப்போம் போட்றா வெடிய… #vvs2
அந்தவகையில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது இதில் வளர்ந்து வரும் நடிகர்களை வைத்து எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக பட வெய்றர்ஸ் கவின் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறி வருகின்றனர்.