ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு… சிங்கிள் பிளீட் சேலை கட்டி ரசிகர்களை சூடாக்கிய ஜான்வி கபூர்!!

767

ஜான்வி கபூர்..

90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி, ஒரு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருந்தவர்.

தற்போது இவரின் மகள் ஜான்வி கபூர் இந்தி திரையுலகை கலக்க தொடங்கியுள்ளார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் அம்மா ஸ்ரீதேவியை நினைவு படுத்தும் வகையில் உள்ளது.

தன்னுடைய தாய் வழி வந்த நடிப்பு திறனால் தற்போது பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்களை தனக்கென சம்பாதித்து வைதுள்ளவர் நடிகை ஜான்வி கபூர்.

தனது முதல் படமான ‘தடக்’ திரைக்கு வரும் முன்பே தாய் ஸ்ரீதேவி மரணமடைந்தது ஜான்வி கபூரை மிகவும் பாதித்தது. அதில் இருந்து மீண்டு வந்த ஜான்வி கபூர், பாலிவுட்டில் அம்மா விட்டுச் சென்ற இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறார்.

பொதுவாக திரையுலகின் வாரிசுகள் ஆரம்பகட்டத்தில் பல்வேறு கருத்துகளுக்கு ஆளாக்கப்படுவது வழக்கம். அவற்றைக் கடந்து சாதனைப் படைத்தவர்கள் சிலரே.

ஜான்வி கபூர் ஆரம்ப கட்டத்தில் இருந்து தனது அம்மாவின் நடிப்புக்கு இணையாக சிறந்த நடிப்பு திறனை வெளிப்படுத்தி வருகின்றார்.

மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் அம்மா மாதிரியே தென்னிந்திய கலாச்சாரத்தின் மீது அதிகம் பற்றுக்கொண்டவர். பல சமயங்களில் மாடர்ன் உடையில் புகைப்படம் வெளியிட்டு கவர்ச்சியில் தெறிக்கவிட்டாலும், சில சமயங்களில் சேலை அழகிலும் மிளிர்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது மிகவும் ஸ்டைலிஷாக, லைட் பிங்க் நிற சேலையில்… ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு இவர் எடுத்து கொண்டுள்ள புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அசப்பில் தன்னுடைய அம்மா… மறைந்த நடிகை ஸ்ரீதேவி போலவே இந்த புகைப்படங்களில் இருக்கிறார் ஜான்வி கபூர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

Previous article“கவர்ச்சி ராணி..” நீலிமா ராணியின் முரட்டு கிளாமர் கிளிக்ஸ்..!
Next articleஃப்ரெஷா இளசா இருக்கு… இறுக்கமான உடையில் இணையத்தை அலற விடும் ரம்யா பாண்டியன்!!