நீங்க கீர்த்தி சுரேஷ் இல்ல… Naughty சுரேஷ்… இணையத்தை கதறவிட்ட கீர்த்தி..!

940

கீர்த்தி சுரேஷ்..

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் ஆகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர். அந்த வகையில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடித்த ராங்குதே என்ற படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று உள்ளது.

தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ராமேஸ்வரம் சென்று சூரிய அஸ்தமிக்கும் அழகை பார்த்து மகிழ்ந்துள்ளார்.

அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “நீங்க கீர்த்தி சுரேஷ் இல்ல… Naughty சுரேஷ்…” என்று கூறுகிறார்கள்.

Previous articleஎனக்கு wife-ஆ வர்றீங்களா? வாணி போஜனின் லவ்லியான புகைப்படங்கள்…!
Next articleநட்சத்திர ஓட்டலில் சட்டை பட்டனை கழட்டி போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு… லேட்டஸ்ட் கவர்ச்சிப் புகைப்படங்கள்..!