ராஷ்மிகா மந்தனா..
கீதா கோவிந்தம் படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களை தன்வசம் இழுத்தவர் ராஷ்மிகா மந்தனா. தனது அழகால் சிரிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட இவர், தமிழ் சினிமாவில் சுல்தான் படம் மூலம் கால் பதித்தார்.
டாப் 10 நடிகைகளில் ராஷ்மிகாவும் இடம்பெற்றுள்ளார். குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, தற்போது 4 மொழிகளில் வெளியாக உள்ள புஷ்பா படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார். அதிலும் சாமி சாமி பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.
அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி போட்டோவை போட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் ராஷ்மிகா, தற்போது வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
வீட்டில் உள்ள தனது செல்லப்பிராணியிடம் சண்டை போடும் ராஷ்மிகா, பின்னர் நாய்க்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளார். இது குறித்த வீடியோவை பகிர்ந்த ரசிகர்கள் இதுதான் உண்மையான அன்பு என விமர்சித்து வருகின்றனர்.
View this post on Instagram