2 கிட்னியும் செயலிழந்து உயிருக்கு போராடும் போண்டாமணி: விஜய் நண்பராக நடித்த நடிகர் கண்ணீர் வேண்டுகோள்!

1067

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர் போண்டா மணியிடம் விஜய்யின் நண்பராக நடித்த நடிகர் ஒருவர் தனக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஜய் நடித்த ‘திருப்பாச்சி’ படத்தில் விஜய்யின் நண்பராக நடித்தவர் நடிகர் பெஞ்சமின். பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், ‘தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர் போண்டாமணி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், தனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகவும், தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், இலங்கையில் இருந்து வந்து தமிழ் திரையுலகில் முத்திரை பதித்துள்ள போண்டாமணிக்கு அனைவரும் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தயவு செய்து உங்கள் நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு உதவ சொல்லுங்கள்” என்று கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Previous articleமொட்டு ஒன்று மலா்ந்திட மறுக்கும்.. மாளவிகா மேனன் லேட்டஸ்ட் ஹாட் Pics!!
Next articleஇளம்பெண் உயிரை பறித்த வங்கி : வெளியான கொடூர சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி!!