அனசுயா பரத்வாஜ் தெலுங்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது ஊடக வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் பல தொலைக்காட்சி சேனல்களில் செய்தி வாசிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சில படங்களில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். இதன் மூலம் நடிகை அனசூயா சினிமாவுக்குள்ள தொடர்பை உறுதிப்படுத்தினார்.
தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்காக தனது ஆடைகளை மேலும் மேலும் குறைத்துக்கொண்டார். டிவி நிகழ்ச்சிகளில் அரைகுறை ஆடைகளுடன் தோன்றியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தன்னை பிரபலமாக்கினார், அதே நேரத்தில் கடுமையான விமர்சனங்களையும் பெற்றார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இதுபோன்ற மோசமான கவர்ச்சியான ஆடைகளை அணிவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் நடிகை அனுயா அவர்கள் சொல்வதைக் கேட்கவில்லை, என் உடம்பில் என்ன அணிய வேண்டும் என்பது என் உரிமை, சுதந்திரம் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, குறிப்பாக நடிகர் ராம்சரண் சமந்தா நடித்த ரங்கஸ்தலம் படத்தில் ராம்சரண் அத்தையாக நடித்தார். இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன்பிறகு, சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான புஷ்பா படத்தில் வில்லனின் மனைவியாக வில்லன் வேடத்தில் நடித்தார்.
புஷ்பா 2 படத்தில் அவருக்கு மிகப்பெரிய கதாபாத்திரம் இருக்கும் என்று நம்பப்படுகிறது. தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான படங்களை அடிக்கடி பதிவிடுகிறார். அந்த வகையில் சமீபகாலமாக ஒருவரின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.