சமந்தாவை போலவே கொடிய நோயால் பாதிக்கப்பட்ட தமிழ் பட நடிகை.. போட்டோவால் அதிர்ச்சியான ரசிகர்கள்!!

195

மம்தா மோகன்தாஸ்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் சகுந்தலம். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பிறகு, மயோசிட்டிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும், இதற்காக மேற்சிகிச்சை எடுத்துக்கொள்ள அமெரிக்கா சென்று வந்தார். கடும் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் சமந்தா மனம் தளராது, திரைப்பட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சமந்தாவை போலவே மற்றொரு நடிகை கொடிய நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான சிவப்பதிகாரம் என்ற திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மம்தா மோகன்தாஸ். இதனை தொடர்ந்து, ’குரு என் ஆளு’ ’தடையறத் தாக்க’ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில், ஆர்யா நடிப்பில் வெளியான எனிமி என்ற திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் ’கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மம்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மம்தா மோகன்தாஸ் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு உடல்நிலை தேறி வந்தார்.இந்நிலையில், தற்போது திடீரென விட்டிலிகோ (Vitiligo) என்ற நோய் தன்னை தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நோய் தோலின் நிறத்தை இழக்க செய்யும் வகையை கொண்டது என்றும், எனவே தான் கொஞ்சம் கொஞ்சமாக நிறத்தை இழந்து வருவதாக அவர் குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Previous articleஆடையை விலக்கி காட்டி மூச்சுமுட்ட வைத்த பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!
Next articleஸ்லீவ்லெஸ் ஆடையில் பொங்கல் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் புகைப்படங்கள்!!