கீர்த்தி சுரேஷ்..
30 வயதான நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு அனைவரின் மனங்களிலும் இடத்தை பிடித்துள்ளார். இவர் 2015ம் ஆண்டில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இருந்தாலும் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் கீர்த்தி சுரேஷை உச்ச அளவில் பிரபலமாக்கியது. அதன் பின்னர் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ திரைப்படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கவர்ந்தார்.
இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் இருக்கின்றார். சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.
தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்துக்காக கூட இவர் மீண்டும் தேசிய விருது பெறுவார் என அனைவராலும் எதிர்பார்க்க படுகிறது.
தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார். இந்த நிலையில் புல்வெளியில் கவர்ச்சி ஆடையில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளார். இவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகின்றது.