விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும்.. ஓவியாவின் சர்ச்சை பேச்சுக்கு வலுக்கும் கண்டம்!!

620

ஓவியா..

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது. ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார். 2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

பொதுவாக மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசுவார் நடிகை ஓவியா. சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் உங்களை யாரேனும் மிஸ் யூஸ் பண்ணியிருக்காங்களா? என கேட்டதற்கு… ஆம், நிறையபேர் பண்ணியிருக்காங்க…. நம்ம ரொம்ப உண்மையா இருப்போம் அதையே சில அட்வாண்டேஜாக எடுத்துக்கொண்டு ஏமாத்திட்டு போய்டுவாங்க அப்படி என் வாழ்கையில் நிறையே பேர் என்னை ஏமாத்தியிருக்காங்க.

பின்னர், படவாய்ப்புகளுக்காக படுக்கைகைக்கு அழைப்பது குறித்து கேட்டதற்கு, அது ரொம்ப தப்பான விஷயம்… இது ஜஸ்ட் சினிமா… உங்களுடைய தொழில் அவ்வளவு தான் அதுக்காக அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணி தான் நடிக்கணும்னு அவசியம் இல்லை. அப்படியான விஷயங்களை வெளியில் தைரியகமாக சொல்லவேண்டும். அப்படி நடிப்பதற்கு சும்மாவே இருக்கலாம். இந்த காலகட்டத்தில் கூட இதுபோன்ற விஷயங்கள் நடக்கிறது என்பதை கேட்கவே வெட்கமாக இருக்கிறது என்றார்.

கடைசியாக ஓவியா லெஸ்பியன் என்று செய்திகள் வெளிவருகிறதே? நீங்கள் லெஸ்பியன் என்பதால் தான் ஆரவ் உங்களை திருமணம் செய்யவில்லை என்கிறார்களே அது உண்மையா? என கேட்டதற்கு…. அது உண்மையில்லை. நான் இப்போது வரை ஆண்களோடு தான் உறவு வைத்துக்கொள்கிறேன். என்னுடைய உறவு முறை எப்போதும் இயற்கைக்கு நேராக தான் உள்ளது மாறாக அல்ல என கூறினார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஓவியா,

முதலில் நாம் எல்லோரும் பாலியல் கல்வியை சரியாக புரிந்துகொள்ளவேண்டும். பாலியல் கல்வி இருந்து என்ன பிரோயஜனம்? அதை பிராக்டிக்கலாக செய்து பார்க்கனும். ஆனால், இங்கு எல்லோரும் தப்பு செய்துவிட்டு தான் ஒரு உத்தமன் என முகமூடி போட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எல்லோருக்குமே ஆசை இருக்கிறது. ஹார்மோன்கள் இருக்கிறது. அதில் இருந்து யாரும் தப்பித்தோ ஆசைகளை அடக்கிக்கொண்டே இருந்ததே கிடையாது.

நிச்சயம் அது அவரவர் மனசாட்சிக்கு தெரியும். எல்லோரும் கலாசாரத்துக்கு பின்னால் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை. எனவே விபசாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும். அப்படி செய்தால் பாலியல் பலாத்காரம் எல்லாம் கம்மியாகும்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ஓவியாவின் இந்த கடைசி கருத்துக்கு பலர் கண்டங்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Previous articleமெழுகுல செஞ்ச சிலை மாதிரி இருக்கீங்க.. ரெஜினாவின் மஜாவான புகைப்படங்கள்!!
Next articleஆண் நண்பருடன் கசமுசா… அபிராமியின் வீடியோவை பார்த்து பதறிப்போன நெட்டிசன்ஸ்!!