மிர்னா மேனன்..
கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் மிர்னா மேனன். அதிதி மேனன் என்கிற பெயரில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பட்டதாரி என்கிற படத்தில்தான் இவர் அறிமுகமானார். அதன்பின் களவாணி மாப்பிள்ளை, புர்கா ஆகிய படங்களில் நடித்தார். மலையாளத்தில் மோகன்லால் நடித்த பிக் பிரதர் படத்திலும் நடித்திருந்தார். இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.
நடிகை மற்றும் மாடலாக வலம் வரும் மிர்னா துபாயில் சாஃப்ட்வேர் துறையில் வேலை செய்து கொண்டிருந்தார்.ஆனால், மாடலிங் துறை மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அந்த வேலையை விட்டு கேரளா வந்தார். தமிழில் நெடுநெல்வாடை என்கிற படத்தில் நடித்தார்.
ஆனால், அந்த இயக்குனர் மீது புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின் அந்த படத்திலிருந்து விலகியே பட்டதாரி படத்தில் நடித்திருந்தார். புர்கா படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார்.
மேலும், நெல்சனின் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு அழுத்தமான வேடம் இல்லை என்றாலும் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார்.
மேலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார். அந்த வகையில், மிர்ணாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.