அதுல்யா ரவி…
கோவையை சேர்ந்தவர் அதுல்யா ரவி. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை கோவையில் முடித்தார். அதன்பின் மேல் படிப்புக்காக சென்னை வந்தார். இப்படி சென்னை மற்றும் கோவை என மாறி மாறி படித்தார். கல்லூரி படிப்பின் போதே இவருக்கு மாடலிங் துறை மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.
பால்வாடி காதல் எனும் குறும்படத்தில் நடித்தார். காதல் கண் கட்டுதே என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆதி நடித்த நாகேஷ் திரையரங்கம் படத்திலும் நடித்தார். கதாநாயகன், ஏமாளி, கீ, சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ், வட்டம், எண்ணி துணிக உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இப்போது மீட்டர் எனும் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவிலும், மாடலிங் துறையிலும் எப்படியாவது ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் இவருக்கு பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் வரவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார். இதற்காக, கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இதன் மூலம் தனக்கு வாய்ப்புகள் வரும் என நம்பி காத்திருக்கிறார். இந்நிலையில், ஜொலிஜொலிக்கும் புடவை அணிந்து விதவிதமான போஸில் அழகை காட்டி அதுல்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் லைக்ஸ்களை பெற்று வருகிறது.