செம ஸ்டைலிஷ் லுக்கில் சமந்தா கொடுத்த போஸ்… வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

1193

சமந்தா…..

அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு தமிழ் பெண்ணாக பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா. சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை.

இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள்.

இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவ்வப்போது அவரே கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தாலும் அந்த நோய் முற்றிலுமாக குணமாகவில்லையாம். இதனால் நோய் தாக்கத்திலே திரைப்பங்களில் நடித்து வருகிறார் சமந்தா.

இந்நிலையில் சமந்தா ” Love this new collection” என கேப்ஷன் கொடுத்து செம ஸ்டைலிஷ் லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை வெளியிட்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த லுக்கில் கொஞ்சம் திமிர், தெனாவட்டாக சமந்தா இருப்பதாக நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Previous articleஇளசுகளை சுண்டி இழுக்கும் ரைசாவின் ஹாட் போட்டோஸ்!!
Next articleஅது ஏன் பெரிதாக இருக்கு? கேவலமா இருக்க… சீரியல் நடிகை ரேஷ்மா கொடுத்த பதில்!!