தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து கண்டபடி வர்ணிக்கும் நெட்டிசன்கள்!!

338

தமன்னா..

ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு பிறகு ஜப்பான் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக சமீபத்தில் நடிகை தமன்னா சென்னை வந்திருந்தார். கருப்பு சேலையை தொடர்ந்து டால்மேஷன் டாக் டிசைனில் ஒரு வெள்ளை மற்றும் கருப்பு நிற சேலையை அணிந்து கொண்டு தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள்,

அவரது முக ரியாக்‌ஷனை வைத்தும் கழுத்தில் இருக்கும் வித்தியாசமான நெக்லஸை பார்த்தும் பயங்கரமாக ஓட்டி வருகின்றனர். ஜப்பான் படத்தில் தமன்னா நடித்துள்ளாரா? என்றும் திடீரென அந்த இசை வெளியீட்டு விழாவுக்கு அவர் பங்கேற்றதன் பின்னணி என்ன? என்கிற ஆராய்ச்சிகள் ஒரு பக்கம் ரசிகர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அது என்னம்மா கருப்பா கழுத்தி நாய் பெல்ட் மாதிரி இருக்கே என கமெண்ட்டுகளை போட்டு மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். ”Not sorry for another saree” என இன்னொரு முறை சேலை கட்டவும் ஸாரி சொல்ல மாட்டேன்.

சேலை தனக்கு ரொம்பவே பிடித்த உடை தான் என்கிற அர்த்தத்தில் அவர் போட்டுள்ள கேப்ஷனையும் பார்த்த ரசிகர்கள் எந்த டிரெஸ் போட்டாலும் தங்கமேனி தமன்னாவுக்கு எடுப்பாகத்தான் இருக்கும் என வர்ணித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் மட்டும் நடிகை தமன்னாவுக்கு சுமார் 2.3 கோடி ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து சூர்யா நடிக்கும் படத்தில் வில்லனாக தமன்னாவின் காதலர் விஜய் வர்மா நடிக்க உள்ள நிலையில், தமன்னா அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போகிறாரா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

Previous articleமுன்னழகை எடுப்பாக காட்டி செம சூடான வீடியோ வெளியிட்ட தர்ஷா குப்தா!!
Next articleநானே காட்டுறேன்.. லிப்லாக் போட்டோ வெளியிட்ட அமலா பால்!!