முட்டி வர துணிய தூக்கி.. இயக்குநர் செஞ்ச அசிங்கமான வேலை: பிரபல நடிகை ஓபன் டாக்!!

1154

அர்ச்சனா..

நடிகை அர்ச்சனா தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார். நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார்.

மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார். சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய டிக்டாக் வீடியோக்கள் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில், 15 படங்களுக்கு மேல் நடித்த இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது, சினிமாவில் அவருக்கு நடந்த மோசமான அனுபவத்தை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் ஒரு பெரிய இயக்குனர் அந்த இயக்குனரின் பெயரை தான் சொல்ல விரும்பவில்லை என்றும், அந்த இயக்குனரின் படத்திற்காக ஆடிஷனுக்கு சென்றிருந்ததாகவும், அவர் தன்னை நர்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டுக்கொண்டார். அப்போது, உதவி இயக்குனர்கள் வெளியே சென்று விட்டனர். அந்த இயக்குனர் மட்டும் இருந்தார். அவர் தன்னிடம் வந்து இந்த கதாபாத்திரத்திற்கு உனக்கு இந்த ஆடை எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

உன் பேண்டை முழங்கால் வரை மேல தூக்கு என்று சொன்னார். சரி என சொல்லி அது போன்று செய்தேன். அவ்வளவு தூக்கியதும் இன்னும் கொஞ்சம் மேலே தூக்கச் சொன்னார். எனக்கு அந்த சமயத்தில் தான் புரிந்தது அவர் தப்பான கண்ணோட்டத்தில் தன்னிடம் பேசுவதாக, தான் சில காரணங்கள் கூறி அங்கிருந்து அந்த சமயத்தில் தப்பித்து விட்டேன் என அர்ச்சனா மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Previous articleஎல்லைமீறும் கவர்ச்சி.. டூபீஸ் ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூனம் பாஜ்வா!!
Next articleஆண்கள் அதுக்கு அழைத்தால்.. நம்பவே கூடாது.. அலெர்ட் செய்த பூனம் பஜ்வா!!