பிரியா பவானி சங்கர்..
செய்தி தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் சின்னத்திரையில் சீரியலில் நடிகையானார் நடிகை பிரியா பவானி சங்கர்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். அதன்பின் வெள்ளித்திரையில் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நல்ல ரோலில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர், தெலுங்கு மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தன்னுடைய நீண்ட நாள் நண்பர் ராஜ்வேல் என்பவரை காதலித்து வரும் பிரியா பவானி சங்கர், அவருடன் சமீபத்தில் வெளிநாட்டு அவுட்டிங் சென்று வந்தார்.
தீபாவளி அன்று அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தோடு வாழ்த்தையும் தெரிவித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் புலம்பிய வண்ணம் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.