மடோனா செபாஸ்டியன்..
கேரளாவை சேர்ந்தவர் மடோனா செபாஸ்டியன். இவர் ஒரு பிகாம் பட்டதாரி. கல்லூரி படிப்பை பெங்களூரில் படித்தார். மடோனாவுக்கு பாடுவதில் அதிக ஆர்வமுண்டு. அப்படி ஒரு தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் பாடியபோது அல்போன்ஸ் புத்திரன் கண்ணில் படவே அவர் இயக்கிய பிரேமம் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.
அடுத்து தமிழுக்கு வந்த மடோனா விஜய்சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. அவரும் அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு சிறப்பாக நடித்திருந்தார். அதன்பின் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் நடிக்க துவங்கினார்.
மீண்டும் விஜய் சேதுபதியுடன் கவன், ஜூங்கா ஆகிய படங்களில் நடித்தார். தனுஷுடன் பவர் பாண்டி படத்தில் நடித்தார். மேலும், வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய படங்களில் நடித்திருந்தார். அதோடு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய லியோ படத்தில் விஜயின் தங்கையாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவருக்கு முக்கிய வேடம் கிடைத்தது.
இதையடுத்து ரசிகர்களிடம் அதிகம் பிரபலமடைந்துவிட்டார். ஒருபக்கம், இவரும் மற்ற நடிகைகளை போல அவ்வப்போது விதவிதமான, அழகான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், கருப்பு நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து மடோனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை பெற்று வருகிறது.