ஜாக்குலின்..
General – ஆக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளம் உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், நம்ம ஆளு Total Opposite சாதரண அழகுடன் சற்று கீச்சு குரலுடன் சாதரணமாக கலக்கி வருபவர் ஜாக்லின். இவர் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.
ஜாக்குலின் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன்களில் ஆங்கர் ரக்சனுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தேன் மொழி பிஏ சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் பலரும் ஜாக்லின் ஒருவருக்காக மட்டும் தான் பார்த்தார்கள் என்பதே உண்மை.
என்னதான் பிஸியாக இருந்தாலும் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் அப்லோடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை தெரிவித்து இருக்கிறார்.
அந்த வகையில், பல கேள்விக்கு பதில் அளித்த ஜாக்குலின் தன்னுடைய காதல் கிசுகிசுவில் ரக்சனோடு பேசும்போது அதற்கான பதிலை நான் கொடுத்திருக்க மாட்டேன். ஏனென்றால், ஒரு விஷயம் நடக்கவே இல்லை. அப்போது எதற்கு பதில் சொல்லணும் என்று தோன்றும். ரக்சன் எனக்கு நல்ல பிரண்ட் அவர் குடும்பமும் அவரது மனைவியும் நல்ல பிரண்ட் என்று கூறியிருக்கிறார்.
விஜய் டிவி பிரபலத்துடன் எனக்கு கிரஷ் இருக்கிறது என்றும், மேலும் கெஸ்ட் என்று சொல்லிட்டு வருவாங்க அங்கர் என்பவர்களை என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என நினைப்பார்கள் அப்படி ஒரு சிலர் என் தோள் மீது கை போடுவார்கள் அப்போது ரொம்பவே கோபம் வரும் அடிக்கணும் போல இருக்கும் என ஓபனாக கூறியிருக்கிறார்.