ஹோட்டல் ரூமில் கதறிய லைலா.. பாலாவின் காலில் விழுந்த பரிதாபம்!!

372

லைலா..

தமிழ் சினிமாவை கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை லைலா. அஜித் நடித்த ‘தீனா’, ‘விக்ரம் நடித்த ‘தில்’ சூர்யாவுடன் ‘பிதாமகன்’ என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் முழுமையாக திரையுலகை விட்டு விலகி இருந்தார்.

இந்த நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், சேது, நந்தா, பிதாமகன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாலாவால் லைலா கதறி அழுத சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

அதாவது, நந்தா படத்தில் சூர்யாவுடன் ராஜ்கிரண், லைலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது, அந்த படத்தின் சூட்டிங்கில் நடந்த ஒரு சம்பவம் ஒன்று வெளியாகி உள்ளது. லைலாவுக்கு முதலில் ஈழத் தமிழ் ஒழுங்காக பேச வரவில்லையாம். மேலும், அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டாராம்.

அதன் காரணமாக பல சமயங்களில் பாலா டென்ஷன் ஆகியுள்ளார். இதனை பார்த்து பயந்து போன லைலா இனி என்னால் நடிக்க முடியாது என கூறிவிட்டு ஹோட்டல் ரூமில் உட்கார்ந்து கதறி அழுதுள்ளார். அதன் பின்னர் அவருடன் இருந்தவர்கள். பாலா மிகச் சிறந்த இயக்குனர் அவரது படத்தில் நடித்தால் கண்டிப்பாக நல்ல பெயர் கிடைக்கும் என தெரிவித்திருந்தனர்.

இதன்பிறகு படம் மொத்தமாக தயாரான நிலையில், லைலா படைத்தை பார்த்துவிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளார். அதனையடுத்து உடனே அருகில் இருந்த பாலாவின் கால்களில் விழுந்துள்ளார் லைலா. என்னை மன்னித்து கொள்ளுங்கள் சூட்டிங் போது நீங்கள் நடந்து கொண்டதை பார்த்து உங்கள் மீது கோபத்தில் இருந்தேன். ஆனால், படம் பார்த்த பிறகு தான் நீங்கள் ஏன் அப்படி நடந்து கொண்டீர்கள் என்று புரிகிறது என லைலா தெரிவித்துள்ளார்.

Previous articleஇந்தக் கட்டையில கட்டில செய்யலாம் போல இருக்கே… மிருணாள் தாக்கூரின் ஹாட் பிக்ஸ்!!
Next articleகவர்ச்சி உடையில் இணையத்தை அசர வைக்கும் அனிகா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!