இதுக்கு நான் ஸ்ரீ ரெட்டியை தடவியிருப்பேன்.. மேடையில் சர்ச்சையாக பேசிய விஷால்!!

296

விஷால்..

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். திரைப்பட தயாரிப்பாளரும் கூட… தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார். ஆக்‌ஷன் படங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர், அவர் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியின் கீழ் படங்களைத் தயாரிக்கிறார்.

அர்ஜுனிடம் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்த விஷால் பின்னர் அவர் ஒரு நடிகரானார். செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்தார். படமும் வெற்றி பெற்றது. பின்னர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி மற்றும் மலைக்கோட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த தொடர்ச்சியான படங்களைத் தொடர்ந்து, விஷால் தனது சொந்த தயாரிப்பு ஸ்டுடியோவை உருவாக்கினார்.

பின்னர் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் மற்றும் பூஜை போன்ற லாபகரமான முயற்சிகளைத் தயாரித்து வேலை செய்துள்ளார். விஷால், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக அக்டோபர் 2015 இல், முந்தைய கமிட்டிக்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்கிய பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்ச்சைகளில் சிக்கிய விஷால் மீது பல விமர்சனங்களும் எழுந்தன.

45 வயதை எட்டியும், இன்னும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் விஷால். பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி விஷால் மீது பகிரங்க குற்றசாட்டை வைத்தார்.

இந்நிலையில் விஷால் கலந்துக்கொண்ட சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவரின் கண்களை கட்டிவிட்டு பாட்டிலில் இருப்பதை தடவி பார்த்து என்ன என்று கண்டுபுடிக்கணும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது பாட்டிலில் ஓணான் இருந்ததை பார்த்து பதறிப்போன விஷால் இத தடவுறதுக்கு நான் ஸ்ரீ ரெட்டியை தடவியிருப்பேன் என முகம் சுளிக்கும் வகையில் பேசியுள்ளார்.

Previous articleஉடலுறவின் போது ஆணுறை கழற்றி… மோசமான அனுபவத்தை பகிர்ந்த சன்னி லியோன்!!
Next articleயாராவது வந்து என் கையை பிடிங்க.. லிஃப்டில் பயந்து போய் மாளவிகா போட்ட பதிவு!!