அட்ஜெட்மென்டுக்கு OK’ன்னா அடுத்த வேலைய பார்க்கலாம்… இதெல்லாம் சினிமா தொழிலில் சகஜமப்பா!!

30

ரெஜினா..

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திரமௌலி, போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட்.

அதன் பின்னர் மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வரும் ரெஜினா தற்போது தனக்கு நடந்த அட்ஜெஸ்ட்மென்ட் அனுபவத்தை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

நான் படவாய்ப்பிற்காக காத்துக்கொண்டிருந்த நேரம் அது. சிலபேரிடம் வாய்ப்பு கேட்டு தொடர்பு கொண்டேன். அதன் மூலம் ஒரு நபர் எனக்கு போன் செய்து, சான்ஸ் தரோம், ஆனால் அட்ஜெஸ்ட்மெண்டிற்கு ஓகே சொன்னால் அடுத்த வேலையை பார்க்கலாம் என சொன்னார். இது சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. அப்போது எனக்கு சரியான புரிதல் இல்லை. அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கான அர்த்தம் கூட என்னவென்று தெரியாது.

நான் நினைத்தேன்… சம்பள விஷயத்தில் தான் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொல்கிறார்கள் என்று, அதனால், சரி ஓகே இதை பற்றி என் மேனேஜர் உங்களிடம் பேசுவார் என சொல்லிவிட்டு போன் கட் பண்ணிட்டேன். அதன் பின்னர் தான் அவர்கள் என்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. நான் முடியாது என சொல்லுவேன்.

இது போன்று எனக்கு மட்டும் இல்லை. சினிமாவில் பல பெண்களுக்கு இதே போல் நடக்கிறது. சில பேர் சும்மாவே கதை விடுகிறார்கள். உண்மையில் நடந்திருக்கலாம்… நடக்காமல் கூட பொய் சொல்லலாம். உண்மை என்னவென்று சம்மந்தப்பட்டவர்களுக்கு தான் தெரியும் என ரெஜினா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

Previous articleபடு மோசமான உடையில் தளபதி 68 பட நடிகை.. உறைந்து போன நெட்டிசன்கள்!!
Next articleபிறப்புறுப்பில் சோதனை… நைட் பார்ட்டியில் நடக்கும் கொடுமை குறித்து இலக்கியா வேதனை!!