நகைக்கடை பிசினஸ் முதல் நடிகை வரை… கோடி கோடியாய் அள்ளும் தமன்னாவின் சொத்து இத்தனை கோடியா?

35

தமன்னா..

2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.

இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.

கடைசியாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். நடிகை தமன்னா பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை கடந்த சில வருடங்களாகவே காதலித்து வருகிறார். அவர்களின் அவுட்டிங், ரகசிய லிப்லாக் உள்ளிட்ட புகைப்படங்கள் வெளியாகி அதை உறுதி செய்ய பின்னர் இருவரும் காதலிப்பதாக ஒப்புக்கொண்டனர்.இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியது.

தமிழ், தெலுங்கு , இந்தி மொழி படங்களில் படு பிசியாக நடித்து முன்னணி நடிகையாக இருந்து வரும் தமன்னா ஒரு படத்திற்கு ரூ. 4 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அத்துடன் ஐட்டம் பாடலுக்கு நடனமாட ரூ. 1 கோடி சம்பளம் வாங்குகிறார். இது தவிர சொந்தமாக ஜுவல்லரி பிசினஸ் செய்து வரும் தமன்னா அதன் மூலம் பல கோடி வருமானம் ஈட்டி வருகிறார். ஆக மொத்தம் தமன்னாவின் சொத்து மதிப்பு ரூ. 110 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleசேலையை அப்படியே நழுவ விட்டு போஸ் கொடுத்த 41 வயதான ஸ்ரேயா சரண்!!
Next articleஉள்ளாடையை கூட விட்டு வைக்கல.. தனுஷ் படம் நடிகை வேதனை!!