இந்தியாவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள 4 கோடி ஆண்டு பழமையான வாசுகி பாம்பு; ஆய்வில் வெளியான மர்மம்!!

60

உலகிலேயே நீளமான பாம்புகளில் ஒன்றாக கருதப்படும் வாசுகி பாம்பானது இந்தியாவில் வாழ்ந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகவும் நீளமானதாகவும் அதிக எடையை கொண்ட பாம்பான வாசுகி பாம்பு இந்தியாவில் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் வாழ்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பாம்பு 4 கோடியே 70 லட்சம் கோடி ஆண்டுக்கு முன்பு இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பானந்த்ரோ லிக்னைட் சுரங்கத்தில் இருந்து எலும்புகள் கிடைத்துள்ளன. கண்டுப்பிடிக்கப்பட்ட குறித்த எலும்பானது பழங்கால முதலை போன்ற உயிரினத்தின் எலும்புகள் என்று குழு நினைத்தது.

இருப்பினும் முதலைக்குரியது என்பது தான் உறுதி செய்யப்படாமல் இருந்ததால், ஆய்வு குழுவினரால் அந்த எழும்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்த எழும்புகள் பாம்புடையது என்பது தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் பூமியில் 50 அடிக்கு ராட்சத பாம்பு வாழ்ந்து வந்துள்ளமை தெரியவந்தது.

பின் அந்த பாம்பு அனகோண்டா வகையை சேர்ந்ததது எனவும் இந்த பாம்பின் பெயர் ‛வாசுகி’ எனவும் தெரிவிக்கப்பட்டது. வாசுகி பாம்பானது இந்து மதத்தை பொறுத்தளவில் சிவபெருமானுடன் தொடர்புடையதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

சிவபெருமான் பாற்கடலை கடைய மத்தாக பயன்படுத்தியது ‛வாசுகி’ பாம்பு எனவும் அந்த வகை பாம்பு தான் இதுவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாம்பானது குளிர் இரத்தம் கொண்டவை மற்றும் உயிர்வாழ சுற்றுச்சூழலில் இருந்து வெப்பம் தேவைப்படுகிறது.

எனவே குஜராத்தின் கட்ச் என்பது வெப்பம் நிறைந்த பகுதி என்பதால் அங்கு வாழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleசதுரங்கத்தை பொழுதுபோக்காகத் தொடங்கி வரலாறு படைத்திருக்கும் தமிழ்நாட்டின் இளம் வீரர்!!
Next articleமரத்தை கட்டிப்பிடிக்க 1,500 ரூபாய் கட்டணம்.. இந்த வனக் குளியலை பற்றி தெரியுமா?