தங்கம் போல் முகம் ஜொலிக்க இந்த ஒரே ஒரு Facepack போதும்.. இப்படி Use பண்ணுங்க!!

55

பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.

ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.

அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளக்க இந்த சார்கோல் Facepack போதும்.

1. தேவையான பொருட்கள்

  • சார்க்கோல்- 1 ஸ்பூன்
  • முல்தானி மிட்டி- 1 ஸ்பூன்
  • ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

ஒரு பவுலில் சார்க்கோல், முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் போன்றவற்றைக் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவவும்.

சருமம் ஏற்கனவே வறண்டிருந்தால் இந்த பேஸ்பேக்கில் சிறிது தேனைக் கலக்கவும்.

2. தேவையான பொருட்கள்

  • சார்க்கோல்- 1 ஸ்பூன்
  • கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்
  • அரிசி மாவு- 1 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

ஒரு பவுலில் சார்க்கோல், கற்றாழை ஜெல் மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை ஒகலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து தேய்த்து சுத்தம் செய்யவும்.

முகத்தில் கரும்புள்ளிகள் பிரச்சனை இருந்தால் முகத்தில் பேஸ்பேக் பயன்படுத்துவதன் மூலம் கரும்புள்ளிகளும் நீங்கும்.

3. தேவையான பொருட்கள்

  • சார்க்கோல்- 1 ஸ்பூன்
  • சோள மாவு- 1 ஸ்பூன்
  • தேங்காய் தண்ணீர்- 1 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

ஒரு பவுலில் சார்க்கோல், கார்ன்ஃப்ளார் மற்றும் தேங்காய் தண்ணீர் சேர்ந்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைத் தண்ணீரில் கழுவலாம்.

உங்கள் சருமம் வறண்டு இருந்தால் இந்த கலவையில் சிறிது தேன் கலந்து கொள்ளவும்.

Previous articleபளபளப்பான சருமம் பெற இந்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்!!
Next articleநரைத்த முடியை கருப்பாக மாற்றும் கிராம்பு : எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா?