நரைத்த முடியை கருப்பாக மாற்றும் கிராம்பு : எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா?

72

பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் ஆண்களுக்கும் தங்களது முடியை கருமையாகவும் நீளமாகவும் ஆரோக்கியத்துடன் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

மனிதர்களில், பெரும்பாலானவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் பொதுவாக இருப்பது நரை முடி பிரச்சினையாகும். நரைத்த முடியை மீண்டும் கருமையாக மாற்ற முடியுமா என்ற கேள்வி பலரது மனதிலும் இருக்கும்.

முடி விரைவாகவே நரைப்பதற்கு ஊட்டச்சத்து குறைப்பாடு முக்கிய காரணமாக கருதப்படுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மன அழுத்தம் காரணமாகவும் முடி விரைவாக நரைப்பதாக சில நிபுணர்கள் கூறுகின்றனர். அந்தவகையில் வீட்டின் சமையலறையில் கிடைக்கும் கிராம்பு வைத்து எப்படி நரைத்த முடியை கருமையாக மாற்றலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்

  • கிராம்பு
  • தேயிலை தூள்

செய்முறை

  • முதலில் இரண்டு கப் தண்ணீரில் ஆறு கிராம்புகளை அரைத்து கொதிக்க வைக்கவும்.
  • பின் அதில் தேயிலை தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  • நீங்கள் முதலில் ஊற்றி இரண்டு கப் தண்ணீர் ஒரு கப் தண்ணீர் ஆகும் வரை கொதிக்க வைத்து ஆற வைக்கவும்.

எப்படி பயன்படுத்த வேண்டும்?

  • நீங்கள் கிராம்பு மற்றும் தேயிலை சேர்த்து கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரை, தலைமுடி வேரில் படும்படி தடவவும்.
  • இவ்வாறு செய்வதன் மூலம் நரை முடி கருப்பாகவும் மாறும் முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். இதை எந்த வயதினரும் பயன்படுத்தலாம்.
Previous articleதங்கம் போல் முகம் ஜொலிக்க இந்த ஒரே ஒரு Facepack போதும்.. இப்படி Use பண்ணுங்க!!
Next articleமனைவியுடன் மாமனாரையும் விட்டு வைக்கலை.. இருவரையும் குத்திக் கொன்று விட்டு தப்பிச் சென்ற மருமகன்!!