குளிர்ந்த நீரை அடிக்கடி குடித்தால் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?

16

குளிர்ந்த நீரை குடிப்பது உடலுக்கு நல்லது இல்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஒரு சிலருக்கு இதய பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும்.

கோடை காலத்திலும், அதிக வெப்பம் இருக்கும் காலத்திலும் தாக்கத்தை தணிக்க குளிர்ந்த நீரை குடிப்போம். இருப்பினும், திடீரென அதிக அளவு குளிர்ந்த நீரைக் குடிப்பது உடலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

அதிக அளவில் குளிர்ச்சியாக உள்ள நீரை குடிப்பது நல்லது இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக இதய நோயாளிகள் குளிர்ந்த நீரை அதிகமாகக் குடிக்கக் கூடாது.

ஏனெனில் அதிக அளவு குளிர்ந்த நீரை குடிப்பது இதயத் துடிப்பைத் தூண்டும் மற்றும் சில நேரங்களில் மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

எப்போதும் அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீர் குடிப்பது நல்லது என்று பல சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். சாப்பிட பிறகு வெதுவெதுப்பான நீரை குடிக்க பரிந்துரைக்கின்றனர், இது செரிமான செயல்முறைக்கு உதவும்.

அதே போல நீரேற்றமாக இருப்பது மிகவும் முக்கியம். தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல் அடிக்கடி தண்ணீர் குடிப்பது நல்லது. மேலும் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் சாப்பிடுவது நல்லது.

Previous articleமரத்தை கட்டிப்பிடிக்க 1,500 ரூபாய் கட்டணம்.. இந்த வனக் குளியலை பற்றி தெரியுமா?
Next articleபளபளப்பான சருமம் பெற இந்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்!!