குருவாயூர் கோவிலில் நடிகை அபர்ணா தாஸ் – தீபக் பரம்போல் திருமணம் நடந்தது… குவியும் வாழ்த்துக்கள்!!

31

பீஸ்ட், மிருகம், தாதா போன்ற படங்களின் மூலம் பிரபலமான மலையாள நடிகை அபர்ணா தாஸ், மஞ்சும்மேல் பாய்ஸ் புகழ் நடிகர் தீபக் பரம்போலை இன்று காலை மணந்தார்.

இவர்களது திருமணம் இன்று கேரளாவில் குருவாயூர் கோவிலில் நடைப்பெற்றது. திருமணத்தில் இருவரின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும், திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

நடிகை அபர்ணா தாஸ், வெள்ளை மற்றும் தங்க சரிகை சேலையில், கனமான எம்ப்ராய்டரி செய்யப்பட்ட பச்சை நிற ரவிக்கை, தங்க நகைகள் மற்றும் தங்க பெல்ட் ஆகியவற்றுடன் பாரம்பரிய முறையில் திருமணத்திற்கு தயாராகி இருந்தார். மணமகன் தீபக் பரம்போல் கேரள ஸ்டைலில் வெள்ளை வேட்டியில் காணப்பட்டார்.

திருமணத்தில் மணமகன் தீபக் பரம்போல், மணமகளின் கழுத்தில் புனித கும்பல் தாலியை கட்டினார். விழாவின் போது, ​​தம்பதிகள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களால் சூழப்பட்டனர். திருமணத்திற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய தம்பதியர், தங்களது வாழ்வின் மிக மகிழ்ச்சியான நாள் என்று கூறிவிட்டு அங்கிருந்து தங்கள் காரில் புறப்பட்டனர்.

அபர்ணா வணிக நிர்வாகத்தில் முதுகலைப் படிப்பை முடித்துவிட்டு மஸ்கட்டில் பணிபுரிந்து வந்தார். விஜய்யின் பீஸ்ட், ப்ரியன் ஓட்டத்திலானு, தாதா, ஆதிகேசவா, மற்றும் ரகசிய வீடு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தீபக் பரம்போல் 2010ல் வெளியான மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் மூலம் அறிமுகமானாலும், மஞ்சும்மேல் பாய்ஸ் ரசிகர்களிடையே பரவலாக கொண்டு சேர்த்தது.

Previous articleமனைவியுடன் மாமனாரையும் விட்டு வைக்கலை.. இருவரையும் குத்திக் கொன்று விட்டு தப்பிச் சென்ற மருமகன்!!
Next articleதனுஷ் ஒரு மனுஷனா? கோர்ட் வரை போன பிறகு என்ன நாகரீகம்? வெளுத்து வாங்கும் பிரபல தயாரிப்பாளர்!!