நடிகர் தனுஷும் , சூப்பர் ஸ்டார் மகள் ஐஸ்வர்யாவும் பிரச்னைகள் தீர்ந்து விரைவில் இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அனைவரின் எதிர்ப்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அக்டோபர் 7ம் தேதி ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் மீது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல்வேறு குறைகளை கண்ட பிறகு வேறு வழியின்றி தான் இந்த ஒரு முடிவை எடுத்திருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் தனுஷ், மிக நெருக்கமாக பழகுவது தான் ஐஸ்வர்யாவின் முக்கிய குற்றச்சாட்டு.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் இந்த குற்றச்சாட்டு குடும்பத்தினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருவரையும் சேர்த்து வைக்கும் பொருட்டு இருவீட்டாரும் தனுஷ், ஐஸ்வர்யா இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் திரையுலக ஜாம்பவான்கள் ஈடுபட்டனர். அனைவரின் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. தற்போது இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் அதே விஷயத்தை உறுதிப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.இந்த வீடியோவில் தனுஷ் பல பெண்களுடன் தனுஷ் தொடர்பில் இருந்தார் என்பதை வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
இதுவரை நாகரிகம் கருதி இதைப் பற்றி பேசாமல் இருந்து வந்தேன். கோர்ட் வரைக்கும் சென்ற பிறகும் இதைப்பற்றி பேசாமல் இருப்பது சரியில்லை எனக் கூறி தனுஷ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் கே. ராஜன் ”கேடு விளைவிக்க பார்க்கறியா தனுஷ்? அப்படி என்ன ஒரு வாழ்க்கை பல பெண்களுடன் உனக்கு? ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதுதான் தமிழ் பண்பாடு. நான் இதுவரைக்கும் நேரடியாக எதுவும் சொல்ல வேண்டாம் என்று தான் நினைத்தேன்.
ஆனால் என் மனசு ஒத்துக் கொள்ளவில்லை.கோர்ட் வரைக்கும் போயிட்ட பிறகு உங்ககிட்ட என்ன நாகரிகம்? தயவு செய்து தமிழ்நாடு, தமிழ் பண்பாடு, தமிழர்களுக்கு பிறந்தவர்கள் என்ற நல்ல மனசு உங்களுக்கு இருந்தால், அந்த பண்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால், மக்களின் சாபத்தை பெறக்கூடாது என்ற எண்ணம் இருந்தால் இருவரும் சேர்ந்து வாழும் வழியைப் பாருங்கள்.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொடுங்கள். குழந்தைகளை காப்பாற்றி அவர்களுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து வைத்து, மகிழ்ச்சியுடன் வாழ வழி செய்யுங்கள். அவர்களை வாழ்த்தி நீங்களும் மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
இதனை தான் அந்த குழந்தைகளும் வாழ்த்துவார்கள் என அந்த வீடியோவில் தயாரிப்பாளர் கே. ராஜன் பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.