மனைவியுடன் மாமனாரையும் விட்டு வைக்கலை.. இருவரையும் குத்திக் கொன்று விட்டு தப்பிச் சென்ற மருமகன்!!

35

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மாமனாரையும் விட்டு வைக்காமல், மனைவியுடன் மாமனாரையும் குத்திக் கொன்று விட்டு தப்பி சென்ற மருமகனை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை உசிலம்பட்டி அருகே எருமப்பட்டியை சேர்ந்தவர் மாயி (55).

இவரது மகள் பவித்ரா (25). உசிலம்பட்டி அருகே உள்ள சொரக்காபட்டியைச் சேர்ந்த பவித்திராவுக்கும், பூவேந்தர் (27) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி நான்கு வயதில் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இருவருக்கும் குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்ட வண்ணம் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக பவித்ரா தனது தந்தை மாயியுடன் பழனிசெட்டி பகுதி முருகன் கோயில் தெருவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

இன்று மதியம் பழனிசெட்டிபட்டி வீதிக்கு நண்பருடன் பூவேந்தர் வந்துள்ளார். அப்போது மனைவி பவித்ராவை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த பவித்ராவின் தந்தையையும் கத்தியால் குத்தி கொன்றுவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பியோடினார். தப்பி ஓடிய பூவேந்தரை போலீசார் தேடி வருகின்றனர்.

Previous articleநரைத்த முடியை கருப்பாக மாற்றும் கிராம்பு : எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா?
Next articleகுருவாயூர் கோவிலில் நடிகை அபர்ணா தாஸ் – தீபக் பரம்போல் திருமணம் நடந்தது… குவியும் வாழ்த்துக்கள்!!