உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் மரணம்.. என்ன நடந்தது?

71

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு, ஹேமசந்திரன், ஹேமராஜன் (26) என்று இரட்டை ஆண் மகன்கள் உள்ளனர்.

இதில் ஹேமசந்திரன் பி.எஸ்.சி. ஐ.டி. முடித்து டிசைனிங் பணியிலும், ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் பணியிலும் இருந்தனர்.

இதில் ஹேமச்சந்திரன் உடல் பருமனாக இருப்பதால் சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆலோசனை மேற்கொண்டு வந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று இவருக்கு, கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் ஹேமச்சந்திரன் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர் சென்னை பம்மல் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததன்படி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Previous articleதிருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை படிப்பை பாதியில் நிறுத்தியதால் விபரீத முடிவு!!
Next article10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல் பெருகும் ஆதரவு!!