உஷார் இப்படியும் நடக்குது லிப்ட் கேட்டு வழிப்பறி.. கொடூரமாக தாக்கி தப்பி சென்ற மர்மநபர்கள்!!

136

நாட்டில் இப்படியும் வழிப்பறி நடக்குது. லிப்ட் கேட்டு, ஆபத்துக்கு உதவ நினைத்தவரைத் தாக்கி வழிப்பறி செய்து விட்டு மர்ம கும்பல் தப்பி சென்றுள்ளது கொடைக்கானலை அதிர செய்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. பெயிண்டராக பணிபுரிகிறார். தினமும் பெருமாள்மலை பகுதியில் இருந்து 12 கிலோமீட்டர் தூரம் கொடைக்கானலுக்கு மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்று வேலை முடித்து மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில் வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது மலைப்பாதை செண்பகனூர் பிரிவு அருகே 3 வாலிபர்கள் வெள்ளிநீர் வீழ்ச்சி அருகே உள்ள நுழைவு சோதனை சாவடியில் இறங்க லிப்ட் கேட்டுள்ளனர்.

இதையடுத்து இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு மொத்தம் நான்கு பேர் ஒரே பைக்கில் சென்றனர். நுழைவு சோதனைச் சாவடி முன்பு, மூன்று வாலிபர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் முனியாண்டியின் தலையில் பலமாக தாக்கினார்.

உடனே முனியாண்டி, இருசக்கர வாகனத்தை சாலையில் போட்டுவிட்டு, தலையில் ரத்தக்கறையுடன் சாலையில் சென்ற வாகனத்துக்கு உதவி கேட்டுள்ளார். சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் இறங்கி உதவி செய்தபோது, மூன்று வாலிபர்களும் அங்கிருந்து தப்பியோடினர்.

இதில் முனியாண்டிக்கு தலையில் வெட்டு விழுந்ததில் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தலையில் எட்டு தையல் போடப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் இந்த வாலிபர்கள் நடந்து சென்று பெருமாள்மலை பகுதியில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி பஸ்சில் ஏறியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், கெங்குவார்பட்டி சோதனைச் சாவடியில் இளைஞர்களை கைது செய்து, கொடைக்கானல் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். மேலும் மதுரையை சேர்ந்த சிவகார்த்திகேயன் (20), சங்கரேஸ்வரன் (19), 15 வயது சிறுவன் (10ம் வகுப்பு தேர்வெழுதிய சிறுவன்) என்பதும் தெரியவந்தது.

மேலும், லிப்ட் கேட்டு இருசக்கர வாகனத்தை திருட திட்டமிட்டு முனியாண்டியின் தலையில் 15 வயது சிறுவனை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகார்த்திகேயன், சங்கரேஸ்வரன் ஆகிய இருவர் மீதும் கொள்ளை, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

 

Previous articleஎன் மரணத்திற்கு காரணம் அப்பா, அம்மா தான் கணவரை பறிகொடுத்த இளம்பெண் விபரீத முடிவு!!
Next articleஎவ்வளவோ சொல்லியும் கேட்கல.. தீராத சந்தேகம்.. மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவன்!!