பொதுவாகவே அனைவருக்கும் தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பருவ கால மாற்றத்தின் காரணமாக அதை சீராக பாதுகாத்துக்கொள்வதில் சிக்கல் ஏற்படும்.
அந்தவகையில் ஒவ்வொரு கோடை காலத்திலும் நீங்கள் தர்பூசணி சாப்பிடுவதை தவிர்த்துக்கொண்டதில்லை. அடிக்கும் வெயில் தாகத்தைத் தவிர்க்க தர்பூசணியின் தேவை இன்னும் அதிகமாக தான் காணப்படுகிறது.
92 சதவீதம் தண்ணீரை உள்ளடக்கிய தர்பூசணியை தண்ணீர் பழம் என்றும் அழைப்பார்கள்.
இதை சாப்பிடுவதால் உங்களுடைய உடல் ஆரோக்கியமாகவும் சீராகவும் இருக்கும். ஆனால் அதன் விதையைால் சருமத்திற்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பார்த்து இருக்கின்றீர்களா?
தர்பூசணியின் விதையை வைத்து எப்படி சருமத்தை பாதுகாக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
சருமத்திற்கும் கிடைக்கும் நன்மைகள்
- வடுக்கள், தழும்புகள் குறையும்
- பருக்களை விரட்டும்
- கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும்
- சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளும்
சருமத்திற்கு எப்படி பயன்படுத்தலாம்?
- தர்பூசணி விதைகளை அரைத்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
- பின் இதை வழக்கமானதை போன்று உங்கள் சருமத்தில் தடவி ஸ்க்ரப் செய்யவும்.
- தர்பூசணி விதைகளைவிதையை பால் அல்லது ரோஸ்வாட்டர் சேர்த்து அரைத்து தடவலாம்.
- தர்பூசணி விதைகளுடன் தயிர் சேர்த்து முகத்தில் பூசலாம்.