ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை சட்டவிரோதமாக ஸ்ட்ரீமிங் செய்ததில் நடிகை தமன்னாவுக்கு தொடர்பு இருப்பதாக மகாராஷ்டிரா சைபர் செல், நடிகை தமன்னாவுக்கு விசாரணைக்கு ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளை சட்டவிரோதமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட வழக்கில் நடிகை தமன்னாவின் பெயர் அடிபட்டு வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக தமன்னாவை, வரும் ஏப்ரல் 29ம் தேதி நேரில் ஆஜராகும்படி மகாராஷ்டிரா சைபர் செல் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.