கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கொடிகேஹள்ளி பத்ரப்பா லே அவுட்டில் வசித்து வந்த ஷோபா. இவருக்கு வயது 48. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதனால், ஷோபா கெடிகேஹள்ளியில் சொந்த வீடு கட்டி தனியாக வசித்து வந்தார்.
கடந்த 19ம் தேதி ஷோபா திடீரென இறந்தார்.. ஷோபாவின் உடல் படுக்கையறையில் கிடந்தது.. அதுவும் நிர்வாணமாக கிடந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். பக்கத்து வீடுகளில் விசாரணை நடத்தி ஷோபாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போதுதான் ஹெரோஹள்ளியை சேர்ந்த நவீன் என்ற 23 வயது வாலிபரின் பெயர் அடிபட்டது.
இந்த இளைஞரும், ஷோபாவும் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. அப்போது, நவீன் கூறிய தகவலை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
ஷோபா எப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் தான் அதிக நேரத்தை செலவிடுவார்.. அப்போது தான் இன்ஸ்டாகிராமில் அறிமுகமானார் நவீன்.. நாளுக்கு நாள் இவர்களின் நட்பு அதிகரித்து வருகிறது.. ஒரு கட்டத்தில் நேரிடையாக சந்தித்து பேசினார்கள்.. பின் நவீனுடன் நெருக்கமாக பேச ஆரம்பித்தார் ஷோபா.
சம்பவத்தன்று நவீன் ஷோபாவின் வீட்டிற்கு வந்துள்ளார்.. இருவரும் அன்றைய தினம் நெருக்கமாக இருந்துள்ளனர்.. இருப்பினும் ஷோபா நவீனை உடலுறவு கொள்ளுமாறு மீண்டும் மீண்டும் வற்புறுத்தி வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த நவீன் ஷோபாவை கொன்றார். இதையெல்லாம் போலீஸ் அறிக்கையில் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் கூறும்போது, “சம்பவத்தன்று ஷோபாவின் மகள் போன் செய்துள்ளார்.
பலமுறை போன் செய்தும் ஷோபா போனை எடுக்கவில்லை. இதனால் பயந்துபோன சிறுமி உடனடியாக அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டின் படுக்கையறையில் தனது தாய் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், கொடிகேஹள்ளி போலீசார் கொலையாளி நவீனை கைது செய்துள்ளனர். இந்த கொலைச் சம்பவம் ஷோபாவின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொந்தளிக்க வைத்துள்ளது.. இதில் மிக மோசமான விஷயம் என்னவென்றால், நவீன் மற்றும் ஷோபாவின் மகள் வயது நிரம்பியவர்கள்.