எவ்வளவோ சொல்லியும் கேட்கல.. தீராத சந்தேகம்.. மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவன்!!

113

தன் கணவனிடன் எவ்வளவோ சொல்லியும் கேட்கலை.. தீராத சந்தேகத்தை எப்படி தீர்த்து வைப்பது என்று குழம்பிக் கொண்டிருந்தார் ரெஜினா. நாளடைவில் இதெல்லாம் சரியாகி விடும் என்று நினைத்தவருக்கு தன்னுடைய வாழ்க்கையே முடியப் போகிறது என்பது தெரியவில்லை.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை சேர்ந்தவர் நாகேந்திரன் (54). சரக்குந்து ஓட்டுனர். இவரது மனைவி ரெஜினாமேரி (47). தம்பதிக்கு சதீஷ்குமார் என்ற மகனும், வர்ஷினி என்ற மகளும் உள்ளனர். சதீஷ்குமார் திருமணமாகி மனைவியுடன் ஓசூரில் வசித்து வருகிறார். அவர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், மனைவியின் நடத்தையில் நாகேந்திரனுக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி தகராறு காரணமாக மனைவி ரெஜினா மேரி ஓசூரில் உள்ள தனது மகன் வீட்டுக்குச் சென்றார். இதனிடையே முத்தையாபுரத்தில் உள்ள வீடு ரெஜினா மேரி பெயரில் உள்ளது.

அதை ரெஜினா மேரி பெயருக்கும், கணவர் நாகேந்திரன் பெயருக்கும் இணைந்து மாற்ற குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெஜினமேரி சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் வீட்டில் இருந்த ரெஜினா மேரியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் நாகேந்திரன் அங்கிருந்து தப்பியோடினார்.இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ரெஜினா மேரியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரெஜினா மேரியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நாகேந்திரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleஉஷார் இப்படியும் நடக்குது லிப்ட் கேட்டு வழிப்பறி.. கொடூரமாக தாக்கி தப்பி சென்ற மர்மநபர்கள்!!
Next article10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த விவசாயி மகள்.. அனைத்து பாடத்திலும் முழு மதிப்பெண் பெற்று சாதனை!!