நிச்சயதார்த்தம் நின்றதால் ஆத்திரம்.. 16 வயது சிறுமியின் தலையை வெட்டி கொடூர கொலை!!

28

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள சுர்லப்பி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகள் மீனா (16). இவர் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியிருந்தார். நேற்று நடந்த பொதுத் தேர்வு முடிவுகளில் மீனா தேர்ச்சி பெற்றிருந்தார்.

இந்நிலையில் சிறுமிக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்தனர். பிரகாஷ் (32) என்ற ஆணுடன் நேற்று நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தன. இதையறிந்த குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சிறுமியின் வீட்டிற்கு சென்றனர்.

சிறுமி மைனர் என்பதால் திருமண ஏற்பாடுகள் செய்யக்கூடாது என்றும், 18 வயது நிறைவடைந்த பிறகு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

அதிகாரிகளின் வார்த்தைகளை ஏற்று பெண்ணின் பெற்றோர் திருமண நிச்சயதார்த்தத்தை ரத்து செய்தனர். நிச்சயதார்த்தம் முறிந்ததால் ஆத்திரமடைந்த பிரகாஷ், சிறுமியின் பெற்றோரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த பிரகாஷ், சிறுமியின் பெற்றோரை தாக்கிவிட்டு, சிறுமியின் தலையை அரிவாளால் துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் தலையை தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரகாஷ் தாக்கியதில் காயமடைந்த சிறுமியின் பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த கொடூர சம்பவத்தை செய்துவிட்டு தப்பியோடிய பிரகாஷை போலீசார் தேடி வருகின்றனர். 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறுமி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஇளம்பெண் படுகொலை.. தாயை கொல்ல நினைத்து மகளைக் கொன்ற கள்ளக்காதலன்!!
Next article20 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த நட்பில் விரிசல்… திருநங்கையை கொலை செய்த பெண்!!