பள்ளி மாணவியின் தலையை அரிவாளால் வெட்டிய இளைஞன்.. அதிர்ச்சிக் காரணம்!!

81

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள சூர்லப்பி கிராமத்தில் வசித்து வருபவர் சுப்ரமணி. இவரது மகள் மீனா 10ம் வகுப்பு படித்து வருகிறார். எழுதியிருந்தார். பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மீனா தேர்ச்சி அடைந்ததும் குடும்பத்தில் சந்தோஷம் அடைந்தனர்.

இதனையடுத்து சிறுமிக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்தனர்.32 வயது பிரகாசுடன் சிறுமிக்கு நேற்று நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடைபெற்றது. இதையறிந்த குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், சிறுமியின் வீட்டிற்கு சென்று மைனர் என்பதால் திருமண ஏற்பாடுகள் செய்யக்கூடாது என அறிவுறுத்தினர்.

18 வயது பூர்த்தியான பின்னர் சிறுமிக்கு திருமணம் செய்துவைக்கலாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். அதிகாரிகளின் பேச்சை ஏற்றுக்கொண்ட சிறுமியின் பெற்றோர், திருமண நிச்சயதார்த்தத்தை அத்துடன் நிறுத்தி விட்டனர்.

திருமண நிச்சயதார்த்தம் நின்றுபோனதால் மணமகன் பிரகாஷ் ஆத்திரமடைந்தான். சிறுமியின் பெற்றோரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற பிரகாஷ், சிறுமியின் பெற்றோரை தாக்கிவிட்டு, சிறுமியை வீட்டில் இருந்து இழுத்து சென்று அரிவாளால் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தார். தலையை எடுத்து கொண்டு அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இந்த பயங்கர சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பிரகாஷ் தாக்கியதில் காயமடைந்த சிறுமியின் பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பயங்கர சம்பவத்தை செய்துவிட்டு தப்பியோடிய பிரகாசை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறுமி, திருமண ஏற்பாட்டால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதகாத உறவை துண்டித்ததால் பணம் கேட்டு மிரட்டிய காதலியை கொன்று புதைக்க முயன்ற காதலன்!!
Next articleமனைவி நடத்தையில் சந்தேகம்… 2 குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை!!