ஓடும் பைக்கில் பெட்ரோல் ஊற்றி காதலன் எரித்து கொலை.. காதலி கவலைக்கிடம்!!

124

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவில் வசித்து வருபவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ். இவர் பூம்புகார் கல்லூரியில் பிகாம் 3 ம் ஆண்டு படித்து வந்தார்.

கடலூர் மாவட்டம் புவனகிரி கச்ச பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வரும் நாகப்பன் மகள் சிந்துஜா மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. 2ம் ஆண்டு பொருளாதாரம் படித்து வருகிறார். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வந்துள்ளார். இது குறித்து இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மே 9ம் தேதி ஆகாஷ், சிந்துஜா இருவரும் பூம்புகார் கடற்கரைக்கு சென்றுவிட்டு மயிலாடுதுறைக்கு பல்சர் இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்தனர். ஆகாஷ் பழகி வரும் பெண்ணிடம் எந்த தொடர்பும் வைத்துகொள்ளகூடாது என்று சிந்துஜா கூறியதற்கு ஆகாஷ் மறுப்பு தொவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிந்துஜா மயிலாடுதுறை பாலக்கரை அருகே வந்தபோது தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போதே ஆகாஷ் மீதும், தன் மீதும் ஊற்றி தீவைத்தார்.

இதில் படுகாயம் அடைந்த இருவரும் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஆகாஷ் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிந்துஜா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Previous articleநான் வேற ஒருத்தர லவ் பண்றேன்… இன்ஸ்டா காதலனுக்கு ஆப்பு வைத்த காதலி.. காதலன் எடுத்த விபரீத முடிவு!!
Next articleமருத்துவமனையில் உயிருக்கு போராடிய கணவன்.. கடைசி சந்திப்பை இழந்த மனைவி… விமானம் ரத்தானதால் சோகம்!!