காதலனுக்காக வீட்டின் உரிமையாளரை கொலை செய்த இளம்பெண்!!

101

காதலனுக்கு வாகனம் வாங்குவதற்காக வீட்டின் உரிமையாளரின் கழுத்தை நெரித்து கொலை செய்து 36 கிராம் தங்கநகையைக் கொள்ளையடித்த இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் பெங்களூருவில், கெங்கேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோணசந்திராவைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி திவ்யா(36). கெங்கேரி புறநகர் சிவனபாளையத்தில் குருமூர்த்தி சலூன் கடை நடத்தி வந்தார். மே 10-ம் தேதி அவர் வேலைக்குச் சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி திவ்யா மட்டும் தனியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், கடையில் இருந்து குருமூர்த்தி வீட்டுக்கு வந்து பார்த்த போது, அவரது மனைவி திவ்யா இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் இருந்த தங்கச்செயின் காணாமல் போய் இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த குருமூர்த்தி உடனடியாக கெங்கேரி காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த போலீஸார், திவ்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆர்.ஆர்.மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போது நகைக்காக இந்த கொலை நடந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இக்கொலை தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணை நடத்திய போது, திவ்யா வீட்டில் வாடகைககு குடியிருக்கும் மோனிகா(24) மீது சந்தேகம் ஏற்பட்டது.

கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த மோனிகா, கடந்த ஒரு வருடமாக ஒரு நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி வேலை செய்து வந்தார். அவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குருமூர்த்தி வீட்டில் அவர் வாடகைக்கு வந்துள்ளார்.

அப்போது அவரது வீட்டிற்கு ஒரு இளைஞர் வந்து சென்றுள்ளார். அவரை தனது கணவர் என்று மோனிகா கூறியுள்ளார். ஆனால், அவர் காதலன் என்று கூறப்படுகிறது. அவருக்கு டாடா ஏஸ் வாகனம் வாங்குவதற்காக பணம் திரட்ட மோனிகா முயற்சி செய்துள்ளார்.

அப்போது தான், திவ்யா கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலி அவர் கண்ணில்பட்டுள்ளது. திவ்யாவின் மாமியாரும் காலையில் வேலைக்குச் சென்று விடுவார். திவ்யா அவரது 2 வயது குழந்தை மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர்.

இதை கவனித்த, ஸ்கெட்ச் போட்ட மோனிகா, யாரும் இல்லாத நேரத்தை பார்த்து, பின்னாலிருந்து வந்து, திவ்யாவை கழுத்தை நெரித்து கொலை செய்தார். அத்துடன் திவ்யா கழுத்தில் கிடந்த 36 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியது தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மோனிகாவை கெங்கேரி போலீஸார் இன்று கைது செய்தனர். நகைக்காக வீட்டின் உரிமையாளரை கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஒருதலைக் காதலால் பயங்கரம்… வீடு புகுந்து இளம்பெண் குத்திக் கொலை!!
Next articleநான் வேற ஒருத்தர லவ் பண்றேன்… இன்ஸ்டா காதலனுக்கு ஆப்பு வைத்த காதலி.. காதலன் எடுத்த விபரீத முடிவு!!