கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியான தொட்டபல்லாபூர் தாலுகாவில் உள்ள கொடிகேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (23). இவர் அமேசான் நிறுவனத்தில் டெலிவரி தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
ஒரு வருடத்திற்கு முன்பு, பாலாஜி இன்ஸ்டாகிராமில் கனகபுரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை சந்தித்தார். சில நாட்களில் காதலாக மாறியது. காதலர்கள் இருவரும் வெவ்வேறு இடங்களில் சுற்றித்திரிகின்றனர்.
இந்த நிலையில் அந்த இளம்பெண்ணை பாலாஜி திருமணம் செய்ய விரும்பினார். பாலாஜி தனது விருப்பத்தை அந்த பெண்ணிடம் தெரிவித்தார். எனினும் இந்த திருமணத்திற்கு தனது வீட்டில் சம்மதிக்கவில்லை என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
மேலும் பாலாஜியிடம் தான் வேறு ஒருவரை காதலிப்பதாக அந்த பெண் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி நேற்று விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாலாஜியின் பெற்றோர் அறிந்ததும், சம்பந்தப்பட்ட இளம்பெண் மீது தொட்டபல்லாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு வருடமாக காதலித்து வந்த வாலிபர், திருமணம் செய்ய மறுத்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.