அலற வைத்த ஒருதலைக்காதல்… இளம்பெண் ஓட ஓட விரட்டி கொலை!!

59

சிறு வயது முதலே தான் காதலித்து வந்த பெண், தன்னை காதலிக்காமல் வேறு ஒருவரை காதலிப்பது தெரியவந்ததால் அவரை கொலை செய்திருக்கிறார் ஒரு இளைஞர்.

பள்ளிக்காலம் முதலாக தான் காதலித்து வந்த இளம்பெண், தன் காதலை ஏற்காத விரக்தியில் அப்பெண்ணை ஓட ஓட விரட்டி இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் ஹுப்பளியை சேர்ந்தவர் கிரிஷ் சாவந்த் (21). இவர் தனது பள்ளிக்காலம் முதலாகவே தனது வீட்டுக்கு அருகே வசிக்கும் அஞ்சலியை (20) ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பல முறை தனது காதலை அஞ்சலியிடம் கிரிஷ் தெரிவித்த போதும், அதை அவர் ஏற்காமல் இருந்துள்ளார்.

இதனிடையே, தற்போது கல்லூரியில் படித்து வரும் அஞ்சலி, தனது உடன் பயிலும் இளைஞரை காதலித்து வருவது கிரிஷுக்கு தெரியவந்தது. தான் பல ஆண்டுகளாக காதலை சொல்லியும் ஏற்காமல், இப்போது வேறு இளைஞரை அஞ்சலி காதலிக்கிறார் என்பதை கிரிஷால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு அஞ்சலி கல்லூரிக்கு போகும் போது, அவரை வழிமறித்த கிரிஷ், தன்னை ஒழுங்கு மரியாதையாக காதலிக்குமாறு மிரட்டியுள்ளார். அதற்கு அஞ்சலி, உன்னை பார்த்தால் எனக்கு காதல் வரவில்லை எனக் கூறி சென்றிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த கிரிஷ், இன்று அதிகாலை அஞ்சலி வீட்டுக்கு சென்ற கிரிஷ், அங்கிருந்த அஞ்சலியை தன்னிடம் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனால் அவர் கத்திக் கொண்டே வெளியே ஓடி வந்தார்.

ஆனால், விடாலும் துரத்திய கிரிஷ், அஞ்சிலியை குத்திக் கொலை செய்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், தலைமறைவான கிரிஷ்ஷை தேடி வருகின்றனர்.

Previous articleகணவருடன் வாழ பிடிக்கவில்லை.. காதலனுடன் கிளம்பிய கர்ப்பிணி.. ஷாக்கில் கணவன்!!
Next articleஇன்ஸ்டாகிராம் மூலம் காதல்.. ஒரே மாதத்தில் உயிரை மாய்த்து கொண்ட இளம் ஜோடிகள்!!