பேருந்தில் பயணித்த இளம்பெண் திடீர் உயிரிழப்பு.. அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், நடத்துனர்!!

56

தமிழக மாவட்ட கோவையில் இளம்பெண்ணொருவர் பேருந்தில் பயணித்தபோது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் மகாலட்சுமி (23). விடுதியில் தங்கி படித்து வந்த இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதற்காக அவர் மருத்துவமனைக்கு சென்றும் குணமாகவில்லை. இதனால் தனது சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு மகாலட்சுமி கிளம்பினார்.

ஆம்னி பேருந்தில் பயணித்த மகாலட்சுமி கோவை வந்தும் கீழே இறங்கவில்லை. அவருடன் வந்த நபர் எழுப்ப முயன்றபோது மகாலட்சுமி உயிரிழந்தது தெரிய வந்தது.

உடனே பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரவு 11 மணியளவில் சென்னையில் பேருந்தில் ஏறிய மகாலட்சுமி, பெற்றோரை தொடர்புகொண்டு ஊருக்கு வந்துகொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

ஆனால் அவர் திடீரென்று உயிரிழந்துவிட்டார், மாரடைப்பு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என தெரிகிறது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் முழு விபரம் தெரிய வரும் என கூறப்பட்டுள்ளது.

Previous articleமருத்துவமனையில் உயிருக்கு போராடிய கணவன்.. கடைசி சந்திப்பை இழந்த மனைவி… விமானம் ரத்தானதால் சோகம்!!
Next articleகாதல் கணவரை அடித்தே கொன்ற மனைவி… நாடகத்தால் மிரண்ட போலீஸ்!!