ஒன்லைன் விளையாட்டில் பறிபோன பணம்… 23 வயது இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

62

சென்னையில் இளைஞர் ஒருவர், ஒன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்லைன் ரம்மி

கொருக்குப்பேட்டை கே.கே.நகரைச் சேர்ந்த மருத்துவ கல்லாரி மாணவர் தனுஷ் (23). இவர் ஒன்லைன் ரம்மி விளையாடுவதில் கவனம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், தொடர்ச்சியாக அந்த விளையாட்டில் பணத்தை இழந்துள்ளார் தனுஷ். எனினும் அவர் அதனை கைவிடவில்லை.

இந்த நிலையில், தனுஷ் தனது தந்தையிடம் 24,000 ரூபாய் பணம் கேட்டுள்ளார், ஆனால் அவர் 4,000 ரூபாய் மட்டுமே பணம் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

தூக்கில் தொங்கிய மாணவர்

இதனையடுத்து தன் அறைக்கு சென்ற தனுஷ் கதவைப் பூட்டிக்கொண்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் கதவைத் திறக்காததால், பதறிய குடும்பத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் வீட்டிற்கு விரைந்த பொலிஸார் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது தனுஷ் மின்விசிறியில் தூக்கில் தொங்கியிருந்தது தெரிய வந்தது.

அவரது உடலைக் கைப்பற்றிய பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleஎன் பொண்டாட்டிய அபகரிச்சதும் இல்லாம என்னையே போட பாக்குறியா? கதவை உடைத்து ரவுடி படுகொலை!!
Next articleதெருவில் கிடந்த விலையுயர்ந்த வாட்சை ஒப்படைத்த இந்திய சிறுவன்… கௌரவித்த துபாய் அரசு!!