குழந்தையை மறந்து விட்டு சென்ற பெற்றோர்… காருக்குள் மூச்சு திணறி உயிரிழந்த சோகம்!!

83

காருக்குள் குழந்தையை மறந்து தனியே விட்டு விட்டு பெற்றோர் கீழிறங்கிய நிலையில், காருக்குள்ளே மூச்சுத்திணறி 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள கடோலி பகுதியைச் சேர்ந்த பிரதீப் சாகர், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் நேற்று இரவு திருமண விழாவுக்குச் சென்றுள்ளார். திருமண இடம் வந்ததும் மனைவியும் மூத்த மகளும் காரில் இருந்து இறங்கினர்.

தனது இரண்டாவது மகள் கோர்விகாவும் (வயது 3) இறங்கி விட்டதாக நினைத்து பிரதீப் காரை பார்க்கிங் பகுதிக்கு ஓட்டி சென்று காரை பூட்டிவிட்டு திரும்பி வந்தார்.

இரண்டு குழந்தைகளும் மனைவியுடன் இருப்பதாக நினைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார். நீண்ட நேரமாக அவர்களை சந்திக்கவில்லை. உறவினர்களை சந்திப்பதில் மும்முரமாக இருந்தார். அதேபோல், கணவருடன் இருப்பதாக நினைத்த கோர்விகாவின் மனைவி, வேறு பகுதியில் அமர்ந்து உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

சுமார் 2 மணி நேரம் கழித்து, கணவன்-மனைவி சந்தித்தனர். கோர்விகா எங்கே? ஒருவரையொருவர் விசாரித்ததில், குழந்தையை காணவில்லை என்பது தெரியவந்தது. குழந்தையை தேட ஆரம்பித்தனர். திருமண விழா நடக்கும் பகுதி முழுவதும் தேடிவிட்டு நேராக காருக்கு வந்தனர்.

காரைத் திறந்து பார்த்தபோது, குழந்தை மூச்சுத் திணறி அசையாமல் கிடந்தது. குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு காருக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை உணர்ந்த கணவன், மனைவி இருவரும் அலறி துடித்தனர். காடோலி போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது, தங்களின் தவறு காரணமாக குழந்தை இறந்ததால், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாங்கள் விரும்பவில்லை என்றும், வழக்கு பதிவு செய்ய விரும்பவில்லை என்றும் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

Previous articleகல்யாணமாகி 4 மாசம் தான்… புதுமணத் தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை!!
Next articleஎன் பொண்டாட்டிய அபகரிச்சதும் இல்லாம என்னையே போட பாக்குறியா? கதவை உடைத்து ரவுடி படுகொலை!!