கேரள மாநிலம் கொல்லம் அருகே கிளிக்கொல்லூர் பகுதியில் இளம்பெண்ணும், இளைஞரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
இந்நிலையில் இளம்பெண் மற்றும் இளைஞரின் உடல்கள் சிதறி கிடந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தற்போது மரணம் அடைந்தவர்கள் யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி சந்தன தோப்பு பகுதியில் வசித்து வரும் 18 வயது அனந்து என்ற இளைஞரும் கொச்சி களமசரி பகுதியில் வசித்து வரும் 18 வயது மீனாட்சி என்ற பெண்ணும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதில் அனந்து கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த நிலையில் மீனாட்சி பிளஸ் 2 முடித்துள்ளார். இச்சம்பவ நாளில் ஆனந்து வெளியே சென்று விட்டு வருவதாக கூறிய நிலையில் மீனாட்சி மதிப்பெண் சான்றிதழ் வாங்குவதற்காக செல்வதாக வீட்டில் கூறியுள்ளார்.
இவர்கள் இருவரும் ரயில் முன்பு கட்டிப்பிடித்தபடி தற்கொலை செய்துள்ளனர். அதாவது இருவரும் instagram மூலம் பழகிவ் வந்த நிலையில் இந்த காதல் ஒரு மாதம் நீடித்தது.
இந்த ஒரு மாத காதலை பெற்றோர் ஏற்க மாட்டார்கள் என அவர்களாகவே முடிவு செய்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.