கள்ளத்தொடர்பில் இரண்டாவது மனைவி… ஆத்திரத்தில் கணவர் செய்த வெறிச்செயல்!!

56

கடலூர் முத்துநகர் அருகே சோனாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இந்துமதி (35). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் ரமேஷ் இந்துமதியின் தங்கை சூர்யாவை (33) இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

ரமேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், சூர்யாவுக்கு கடலூர் மாநகரில் உள்ள வேறொரு நபருடன் திருமணத்துக்குப் புறம்பான தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு ரமேஷ் பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளார். இருப்பினும் திருமணத்திற்கு புறம்பான உறவை சூர்யா கைவிடவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து, ஆறு மாதங்களுக்கு முன் ரமேஷ் சொந்த ஊருக்கு திரும்பினார். பின்னர், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சமாதானம் பேசி, ரமேஷுடன் சரியாக குடும்பம் நடத்த சூர்யாவுக்கு அறிவுரை வழங்கினர்.

இதைத்தொடர்ந்து இருவரும் கடலூர் முத்துநகர் சோனகர் தெருவில் உள்ள வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை சூர்யாவுக்கும், ரமேஷுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சூர்யாவை கழுத்து, கை மற்றும் பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினார்.

இதில் சம்பவ இடத்திலேயே சூர்யா ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, ரமேஷ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவான ரமேஷை போலீஸார் தேடி வருகின்றனர்.

Previous articleஎப்போ கல்யாணம் …தொடர்ந்து கேட்டு டார்ச்சர் செய்த காதலி… மனமுடைந்த காதலன் எடுத்த விபரீத முடிவு!!
Next articleகாதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை குத்தி கொலை… பதுங்கி இருந்த இளைஞர் அதிரடியாக கைது!!