மனைவி கழுத்தை நெறித்து செல்பி எடுத்த கணவன்.. அடுத்து நடந்த விபரீதம்!!

44

உத்தரபிரதேச மாநிலம் இடாக்கைச் சேர்ந்த தம்பதியர் காஜியாபாத்தில் வசித்து வந்தனர். இவரது கணவர் அங்குள்ள லோனி என்ற இடத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி டெல்லியின் புறநகர் பகுதியான நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்தது. மனைவி வேலைக்கு செல்வது கணவனுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவி கழுத்தில் தாவணியை சுற்றி இழுத்தார்.

இதில் அந்த பெண்ணின் கழுத்து எலும்புகள் நசுங்கி அங்கேயே உயிரிழந்தார். மனைவி இறந்ததை உறுதி செய்த கணவர், சடலத்துடன் செல்ஃபி எடுத்தார். மனைவி உடலை இடுப்பில் வைத்து பல கோணங்களில் செல்ஃபி எடுத்து செல்போனில் பதிவு செய்துள்ளார்.

பின்னர் அந்த செல்ஃபியை தனது தம்பி மற்றும் உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார். இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். எந்த பதிலும் இல்லை.

அதன்பிறகு அந்த நபரின் சகோதரர் காஜியாபாத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறையில் பெண் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டார்.

அதே அறையில், கணவர் கொலை செய்ய பயன்படுத்திய அதே தாவணியை பயன்படுத்தி அவர் தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரது உடல்களையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleகடன் தொல்லை மனைவி, மகனுடன் விஷம் குடித்து ஜவுளி வியாபாரி தற்கொலை!!
Next article4 மாதங்களில் 430 கொலைகள்… கதி கலங்க வைக்கும் புள்ளி விவரம்!!